திருவெறும்பூரில் தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்..!
திருவெறும்பூர் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்நடைப்பெற்றது.
மாநில நிர்வாகி இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் தயாளன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில், தமிழகத்தில் டெங்குவை ஒழிப்பதற்காக கடந்த 2006 திமுக ஆட்சிக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உட்பட தமிழகத்தில் 28 ஆயிரம் ஊழியர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றும் எங்களுக்கு ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி பணியை வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்குச் சம ஊதியமும், ஊராட்சி ஒன்றியங்கள் மூலமே மாதம் 7 ந் தேதிக்குள் வழங்க வேண்டும், 5 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றும் களப்பணியாளர்களைத் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த வேண்டும், தமிழக முதல்வர் அறிவித்ததன்படி சிறப்பு கரோனோ நிவாரண நிதியை வழங்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்க வேண்டும், கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், ஊழியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், ஒன்றியங்கள் மூலமாக முன்பு போல் ஊதியத்தை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில செயலாளர் மணிராஜ், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மாநில பொருளாளர் பெரியசாமி, தமிழ் மாநில அரசுப் பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, மாவட்டத் தலைவர் ஜான் வரவேற்றார்.மாரிச்சாமி நன்றி கூறினார்.