திருச்சி மாநகர் & புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…!
அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க பகுதி வாரியாக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று திருச்சி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் T.ரத்தினவேல் Ex MP.,முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் KC.பரமசிவம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர்ஆர்.ஜோதிவாணன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் C. அரவிந்தன்,மாவட்ட அவைத்தலைவர் V.ஐயப்பன்,மாவட்ட துணைச் செயலாளர் R.வனிதா,முன்னாள் ஆவின் தலைவர் C.கார்த்திகேயன்,பகுதி கழகச் செயலாளர்கள் MA.அன்பழகன், D.சுரேஷ் குப்தா, LKR.ரோஜர், NS.பூபதி, நாகநாதர் A.பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் ,மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள் TAS.கலிலுல் ரகுமான், M.ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ்,N. பாலாஜி, R.வெங்கட் பிரபு,மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாப்தின்,ராதா வேங்கடநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக்கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், மு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயளாலர், S.வளர்மதி, முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள்அரசு தலைமை கொறடாஆர். மனோகரன்,கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.