உதயாநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாநகர திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!
தமிழ்நாட்டின் துணை முதல்வராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாநகர திமுக சார்பாக இன்று கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர்மு.மதிவாணன் தலைமையில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்வை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சேகரன், மாநில நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார், ஒன்றிய செயலாளர் கங்காதரன், நகரச் செயலாளர் காயாம்பு, பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், மாநகர நிர்வாகிகள் தமிழ்செல்வன், செல்லையா, கே.கே.கே. கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.