அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியான வருகிற அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்–ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்–தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி–யின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீா் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்ககம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், மாற்றுத்திறனாளி–கள் இயக்ககம் கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், வடகிழக்கு பருவ–மழை போன்றவை விவாதிக்கப்படும். கிராம சபை கூட்டத்–தில் அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள், வாக்காளா்கள், தன்–னாா்வலா்கள், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று ஊராட்சியின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த தக–வலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.