தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 482 பேருக்கு பணி நியமன ஆணையை அருண் நேருஎம்பி வழங்கினார்..!
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஜமால் முகமது கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமை வகித்தார்.முகாமில் 154 தனியார் துறை நிறுவனங்கள், 7 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர்.
இந்த முகாமில், வேலைதேடுபவர்கள் 4,682 பேர் கலந்து கொண்டனர். இதில் 578 பேர்2-ம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 482 பேருக்கு பணி நியமன ஆணையை பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு,மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் வழங்கினர். நிகழ்சசியில் அருண் நேரு எம்.பி. பேசுகையில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது. 10 ஆயிரம் பேருக்கான வேலைகள் உள்ளது. ஆனால் 2 ஆயிரம் பேர் தான் வேலைக்கு வருகிறார் கள். இந்திய அளவில் பெண்கள் வேலைக்கு செல்வது 18 சதவீதம். ஆனால் தமிழகத்தில் 54 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என கூறினார்.
முகாமில் துணை இயக்குனர் மகாராணி, ஆர்.டி.ஓ. அருள், ஜமால் முகமது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் காஜா–நஜீமுதீன், பொருளாளர் ஜமால் முகமது கல்லூரி முதல்வர் ஜார்ஜ் அமலரெத்தினம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மாசில் ஆஷா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வேலை வாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டது.