திருச்சி சோமர சம்பேட்டை உய்ய க்கொ ண்டான் வாய்க்கால் படித்துறை அருகே குளிர்சா தன வசதி பாருடன் கூடிய சிகரம் மனமகிழ் மன்றம் திறக்கப் பட்டது.புதிதாக திறக்கப்பட்ட இந்த மனமகிழ் மதுக்கடை எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தமிழர் தேசம் கட்சி சார்பில் நேற்று மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கட்சியின் தலைவர் கே. கே செல்வகுமார் ஆலோசனையின்படி முடிவு செய்தனர்.போலீசார் அனுமதி மறுத்ததால் போரா ட்டக்காரர்கள் சோம ரசம்பே ட்டை உய்ய க்கொ ண்டான் வாய்க்கால் பாலத்தில் இருந்து நடை பயணமா க சோம ரசம்பே ட்டை எம்ஜிஆர் சிலை அருகே சென்று அங்கு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் துரை குணசேகரன் தலைமை தாங்கினார். மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் பனையடி முன்னிலை வகித்தார். தமிழர் தேசம் கட்சி மாநில பொது செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கி ணைப்பாளர் குரு மணிகண்டன்,வீர முத்தரையர் முன்னே ற்ற சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைரவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி (அந்தநல்லூர் தெற்கு), கோபி (அந்தநல்லூர் வடக்கு), பழனி (மணிகண்டம் தெற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர். சட்டக்கல்லூ ரி மாணவர் அணி பொறுப்பாளர் திவாகர் நன்றி கூறினார். ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தர் தலை மையில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் உள்பட 100 – க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.