ரூ.1,111க்கு டிக்கெட்டில் விமானத்தில் பறக்கலாம் : இண்டிகோ அறிவிப்பு!

- Advertisement -

0

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தனது பயணிகளுக்கு கிராண்ட் ரன்வே ஃபெஸ்ட் சேல்-ஐ என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகையை பயன்படுத்தி 3 டயர் ஏசி ரயில் டிக்கெட்டுக்கு ஆகும் செலவில் விமானத்தில் பயணம் செய்யலாம்.இந்த ஆண்டின் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ரயில், பேருந்துகள் மட்டுமின்றி விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விமானக் கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தனது பயணிகளுக்கு கிராண்ட் ரன்வே ஃபெஸ்ட் சேல் என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகையை பயன்படுத்தி 3 டயர் ஏசி ரயில் டிக்கெட்டுக்கு ஆகும் செலவில் விமானத்தில் பயணம் செய்யலாம்.

- Advertisement -

இண்டிகோவின் பண்டிகை கால சிறப்புச் சலுகையில், பயணிகளுக்கு ரூ.1,111 ஆரம்ப விலையில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கும். இருப்பினும், இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள செப்டம்பர் 30 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.இந்தச் சலுகையில் பாங்க் ஆப் பரோடா மற்றும் பெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று இண்டிகோ (IndiGo) தெரிவித்துள்ளது. இதற்கு பெடரல் வங்கிக் கணக்கில் FED15 என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். பேங்க் ஆஃப் பரோடா கணக்கில் 6EBOB என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகையைப் பெற குறைந்தபட்சம் ரூ. 5000 மதிப்புள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பயணிகளுக்கான இந்த சிறப்புச் சலுகைகள் செப்டம்பர் 24முதல் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும். ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.