திருச்சி என் ஐ டி ஐ கல்லூரியில் பெஸ்டெம்பர் விழா தொடங்கியது…!

- Advertisement -

0

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரியில் நான்கு நாட்கள் நடைபெறும் பெஸ்டெம்பர் விழா தொடங்கியது.திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெறும்  தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான பெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது,இந்த விழாவானது இன்று தொடங்கி 29ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் தொடக்க விழாவில் இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை நடக்கவுள்ள போட்டிகள் முதல் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் வரை பெஸ்டெம்பர் கொண்டுள்ளது.

- Advertisement -

பெஸ்டம்பரின் தொடக்க விழாவிற்கு என் ஐ டி மாணவர் நலன் டீன் கார் வேம்பு தலைமை வைத்தார். பேராசிரியர் நல ஆலோசகரும் பெஸ்டமர் ஒருங்கிணைப் பாளருமான பார்த்திபன் முன்னிலை வகித்தார்.திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பெஸ்டம்பரைத் தொடங்குவதற்கும், மாபெரும் திறப்பு விழாவைக் கொண்டுவருவதற்கும் திருச்சி என் ஐ டி கல்லூரி இசைக் குழு மற்றும் நடனக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த விழாவில் என்ஐடி மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.