முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்…!

- Advertisement -

0

கடந்த 2011 – 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி,48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்தனர்.இதன் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்தது. அவர் மீது, 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆக., 12ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள், தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன.

- Advertisement -

இதையடுத்து செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு விசாரித்து வருகிறது.செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, சித்தார்த் லூத்ரா ஆஜராகினர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா, ஜோஹாப் ஹுசைன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து 15 மாத சிறைவாசத்துக்கு பின் செந்தில் பாலாஜி விடுதலை ஆகிறார்.மேலும் ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்திரவாதம் வழங்க வேண்டும் என்றும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.