சுரண்டையில் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு எண் 191 மற்றும் பீடித் தொழிலாளர் நலநிதி மருந்தகம் சுரண்டை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவில் நாட்டு நலப்பணி திட்டம் அலகு எண் 191 ன் திட்ட அலுவலர் கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ரா.வீரபத்திரன் வரவேற்புரை ஆற்றினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமைக் கமிட்டித் தலைவர் ச.தங்கையா நாடார் மற்றும் பீடித் தொழிலாளர் நலநிதி மருந்தக மருத்துவர் டாக்டர் C.S. அஞ்சலி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் ரா.ஜெயா தலைமையுரையாற்றினார். சுரண்டை சிவசக்தி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ரா.சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பரத் கண் பரிசோதனை குறித்த சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்குக் கண் பரிசோதனை செய்தனர். பொருளியல் துறைத்தலைவர் முனைவர் பா. செல்வகணபதி வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சூ.யேசுதாஸ் பிலிப் நன்றியுரை கூறினார்.