கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் (95).இவர் கடந்த பல ஆண்டுகளாக லாபத்தை பார்க்காமல் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.அந்தவகையில் அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கமலாத்தாளுக்கு மிகப்பெரிய உதவி ஒன்றை செய்துள்ளார்.அதாவது, பாட்டி கமலாத்தாளின் நேர்மை யையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டிற்கு அருகில் 2 சென்ட் நிலம் வாங்கி அவரின் பெயருக்கே பத்திரப்பதிவு செய்தார்.பின்னர், அந்த நில பத்திரத்தை பாட்டி கமலாத்தாளிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒப்படைத்தார்.