வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வருகிற 28.09.2024 அன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில்எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, செவிலியர், ஐடிஐ, டிப்ளமோ, பார்மசி, பொறியியல் படிப்புகள் போன்ற கல்வி தகுதி உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.மேலும் பங்கு பெறுவர்கள் தங்களது கல்வி சான்றிதழ் நகலுடன் ஆதார் கார்டு,பயோடேட்டா உடன் நேரில் கொண்டு வர வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
10000 க்கு மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச பயிற்சிக்கான பதிவும் நடைபெறுகிறது.தனியார் வேலை முகாமில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் வேலை கொடுப்பவர், வேலையை தேடுபவர் www.tnprivatejobs. tn. gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதிற்குட் பட்டோர் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு திருச்சியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.