திருச்சியில் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் வாழ்க்கை வரலாறு நூல் மறு வெளியீட்டு விழா…!
திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரி வளாகத்தில் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் வாழ்க்கை வரலாறு நூல் மறு வெளியீட்டு விழா திமுக முதன்மை செயலாளரும்,அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, கூட்டுறவு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி,தொழிலதிபர் திரு.கே.என்.ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.முன்னதாக ராமஜெயம் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
விழாவில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார்மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.