இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று (செப்டம்பர் 20) தொடங்கியது. இந்த ஐபோன் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max மற்றும் iPhone 16 Plus ஆகிய மாடல்கள் அடங்கும். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை செப்டம்பர் 9ம் தேதி அறிமுகப்படுத்திய நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது. முன் கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கான டெலிவரிகளும் இன்று விற்பனை தொடங்கியது.திருச்சியில் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஆப்பிள் ஐபோன் அங்கீகரிக்கப்பட்ட ஷோருமான ஐ பிளானட் ஷோரூமில் ஏற்கனவே புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். 100 க்கும் மேற்பட்ட ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனை அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவில், ஐபோன் 16 இன் விலை ₹79,900 , ஐபோன் 16 ப்ளஸ் ₹89,900 ,ஐபோன் 16 ப்ரோ ₹1,19,900 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இன் ₹1,44,900 விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 16 ஐ பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் இணையதளம், ஆப்பிளின் இயற்பியல் கடைகள், அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் குரோமா, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற பல பிராண்ட் எலக்ட்ரானிக்ஸ் அவுட்லெட்டுகள் மூலம் வாங்கலாம். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் தகுதியான கார்டுகள் மூலம் ₹5000 வரை உடனடிச் சேமிப்பைப் பெறலாம்.