பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக அலுவலக மாடியில் லதா பயிற்சியகத்தில் வட்டாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் Ln A.ஸ்டான்லி பிரின்ஸ் சித்துராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவர் முனைவர் Ln த. அருணாச்சலம், சங்க முன்னாள் செயலாளர் Ln R. கலைச்செல்வன், சங்க உறுப்பினர்கள் Ln C. முருக கிங்ஸ்டன், மாவட்ட தலைவர் Ln E. சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சங்கத் தலைவர் Ln K.A. ஆனந்த் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். சங்க ஆசிரியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தை சார்ந்த தொழில் முனைவர்களின் விளம்பர பதாகையை சங்க உறுப்பினர் Ln R. பாண்டியராசா வெளியிட ,சங்க உறுப்பினர் Ln வில்சன் அவர்கள் பெற்றுக் கொண்டார். குட்டி மண்டல தலைவர் Ln L.R.E. சுப்பிரமணியன் என்ற குட்டி, தென்காசி மாவட்ட அமைச்சரவை இணை பொருளாளர் Ln K.R.P. இளங்கோ,சங்கரன்கோவில் பியர்ல் சிட்டி அரிமா சங்க முன்னாள் வட்டார தலைவர் Ln Dr G.குருசாமி, Ln ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், சங்கரன்கோவில் பியர்ல் சிட்டி அரிமா சங்கம், ராஜபாளையம் பெர்பெக்ட் கிங்ஸ் அரிமா சங்கம், மீனாட்சிபுரம் அம்மன் பேஷன் அரிமா சங்கம் ஆகிய சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு அடுத்த காலாண்டு திட்டங்களை அறிவித்தார்கள். நான்கு சங்கங்களை சார்ந்த செயலாளர்கள் நடைபெற்ற காலாண்டு செயல்பாடுகளை வாசித்தார்கள்.பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் Ln S. ஜேக்கப் சுமன் அவர்கள் நன்றியுரை கூறினார்.