திருச்சி பாலக்கரை அருகில் உள்ள சையது முர்துசா மேல்நிலை பள்ளியில் “திருச்சியே வாசி” என்ற தலைப்பில் புத்தக திருவிழா தொடர்பாக மாணவர்களுடன் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மெர்சி கிரைசி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் நோக்க உரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர நாராயணன் முன்னிலை வகிக்க கவிஞர் நந்தலாலா கோவிந்தசாமி வாழ்த்துறை வழங்கினர்.இந்நிகழ்வை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தொடங்கி வைத்தார். முடிவில் தனியார் பள்ளி கல்வி அலுவலர் பேபி நன்றி கூறினார்.இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.