வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு வாகனம் மோதியதில் பரிதாப பலி !

- Advertisement -

0

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஊராட்சிக்குட்பட்ட காந்தளூர் ஊராட்சி சீனிவாசனின் மகன் தங்கதுரை (32).இவரது மனைவி கார்த்திகா (29) இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு கிஷோர் என்கின்ற நான்கு வயது மகனும் சர்வேஸ் என்கின்ற ஒரு வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் தங்கதுரை புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள ஒரு தனியார் வாட்டர் பாட்டில் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம்  வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ராஜ்குமார்  என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது தஞ்சை – திருச்சி புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த  தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சண்முகநாதன் ஓட்டுநர் மது போதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்து தங்கதுரை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தங்கதுரை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

- Advertisement -

மேலும் அவருடன் வந்த நண்பர் ராஜ்குமாருக்கு கால் முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ராஜ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் இறந்த தங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மது போதையில் ஓட்டிச் சென்ற சண்முகநாதன் சரக்கு வாகனம்  டயாரானது பழுது ஆகாமலேயே பழுதானதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.