அமெரிக்காவில் 1946ல் எர்ல் டப்பர் என்பவரால் துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் தயாரித்த பொருட்கள் அனைத்தும் பெண் முகவர்களால் நேரடியாக உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டன.இதனையடுத்து அவற்றின் தேவை குறைந்ததால், தொழிற்சாலையை மூடப்போவதாக டப்பர்வேர் கடந்த ஜூனில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.பிளாஸ்டிக் டப்பா , லஞ்ச் பேக் தயாரிப்பில் கொடிகட்டி பரந்த அமெரிக்காவை சேர்ந்த காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பிரபலமான டப்பர்வேர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் திவாலானதாக அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதன் திவால் அறிவிப்பை இந்த வாரத்தில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திவால் அறிவிப்புக்கான நடவடிக்கைகளை டப்பர்வேர் நிறுவனம் துவங்கிய நிலையில், மேலும் தன்னுடைய 5,800 கோடி ரூபாய் கடனை நிர்வகிக்க, கடன் வழங்கும் நிறுவனங்களுடன் டப்பர்வேர் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் கடன் வழங்க உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், டப்பர்வேர் நிறுவன பொருட்களின் தேவை பெரிதும் குறைந்ததால் நிறுவனத்தின் நிலைமை மோசமானது. இதனை தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றத்தில் திவால் நடைமுறைக்கான ஆவணங்களை இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .