தூத்துக்குடியில் புத்தக திருவிழாவிற்கான இணையதளம், லோகோ கனிமொழி எம்.பி.அறிமுகம்!

- Advertisement -

0

தூத்துக்குடியில் அடுத்த மாதம் நடைபெற புத்தகத் திருவிழா தொடர்பான இணையதளம் மற்றும் இலட்சையினையை கனிமொழி எம்.பி. அறிமுகப்படுத்தினார்.தூத்துக்குடியில் 5ஆவது புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை எட்டையபுரம் சாலையில், சங்கரப்பேரி பகுதியில் உள்ள திடலில் நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புகைப்படக் கண்காட்சி போட்டிக்கான இணையதளம் மற்றும் இலட்சையினை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புத்தக திருவிழாவிற்கான இணையதளம் மற்றும் இலட்சையினை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியின்போது, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.