சிறுகமணியில் வேளாண்மை ஆற்றல் திறன்மேம்பாடு குறித்த நிலைய பயிற்சி!

- Advertisement -

0

திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  வேளாண்மையில் ஆற்றல் திறன்மேம்பாடு மற்றும் மேலாண்மை பற்றிய ஒரு நாள் நிலையப்பயிற்சி 18.09.2024 அன்று சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது.கிராமப்புறங்களில் மின்சக்தியின் தேவை சீரான முறையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.விவசாயத்தைப் பொறுத்தவரை பாசனத்திற்குதான் அதிக ஆற்றல் செலவாகிறது. இதற்கு மின்சாரமும்,டீசலும் தான் எரிபொருளாக பயன்படுகிறது.இந்த ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கிறது. விவசாயத்தில் ஆற்றல் திறனை மேம்படுத்துவது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவுகிறது.

- Advertisement -

எனவே இப்பயிற்சியில் வேளாண்மையில் ஆற்றல்மிக்க மின்திறன் பம்புசெட்டுகள் பயன்பாடு, மின்நுகர்வு குறைப்பு,நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் சென்சார் அடிப்படையில் ஆன காலநிலை பாசன தொழில்நுட்பங்கள், தானியங்கி பாசனம் ,சோலார் பம்புசெட்டுகள் மற்றும் காற்றாலை மூலம் இயங்கும் பம்புசெட்டுகள் போன்ற தலைப்பின் கீழ் பயிற்சி வழங்கப்பட  உள்ளது.எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். பங்குபெற விரும்பும் விவசாயிகள் 9865542358, 9171717832, 04312962854 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேற்கண்ட தகவல்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்சி.ராஜாபாபு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.