தெற்காசியா ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 4வது தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் செப் 11ம் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் இந்தியா உட்பட 7 நாடுகள் கலந்து கொண்ட நிலையில் மொத்தம் 210 வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் 3 நாட்கள் போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இந்தியா முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளது.அதன்படி 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கம் என மொத்தம் 48 பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.9 தங்கம் உட்பட 35 பதக்கங்களுடன் இலங்கை 2ம் இடத்தையும், வங்கதேசம் 3ம் இடத்தையும் பிடித்தது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 7 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.
குறிப்பாக தடகள வீராங்கனை அபிநயா 2 தங்கப்பதக்கமும், கணிக்ஷா டீனா ஒரு தங்கப்பதக்கமும், பிரதிக்ஷா யமுனா ஒரு தங்கப்பதக்கமும், ஜிதின் ஒரு வெள்ளி பதக்கமும், லக்சன்யா ஒரு வெள்ளிப் பதக்கமும், கார்த்திகேயன் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். பூடானும் , பாகிஸ்தானும் பதக்கம் ஏதுமின்றி வெறுங்கையுடன் திரும்பின.