பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு!

- Advertisement -

0

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையில் அவர் கூறியதாவது..
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு எடுத்துகாட்டிய அரசியல் ஆசான் தந்தை பெரியாரின் வாரிசாகவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு நாளை காலை 8 மணி அளவில் திருச்சி சிந்தாமணி உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட ,மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பகுதி, நகர, பேரூர், வட்ட ,வார்டு கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ,திமுக தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அறிக்கையில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.