தென்காசியில் திமுகவின் பவள விழாவையொட்டி கொடியை ஏற்றுதல் நிகழ்ச்சி!

- Advertisement -

0

திமுகவின் பவள விழாவையொட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், பாவூர்சத்திரத்தில் உள்ள முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதனின் இல்லத்தில் திமுகவின் இருவண்ண கொடியை மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் ஏற்றி வைத்தார் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் காலசாமி வரவேற்றார்.

- Advertisement -

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், விவசாய தொழிலாளர்அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி, மகளிரணி நிர்வாகிகள் வைத்தீஸ்வரி,ஷாலிமேரி,ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், தர்மராஜ், ஜான்சி ஜெயமலர், மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திரபாண்டி, அன்பழகன், ஸ்டீபன் சத்தியராஜ், ஆரோக்கியசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமர், முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில்தேவதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி,நிர்வாகிகள் ஜோதிராஜ், வினைதீர்த்தான், மணி, அண்ணாத்துரை, பிரபாகரன், சிவசக்தி, சேர்மகனி, பாண்டியன், முத்துப்பாண்டி, டேனியல், முருகன், காந்திராமன், நடராஜன், ஆனந்த், குருசிங, மாரிமுத்து, செல்வராஜ், சிவன்பாண்டி, வழக்கறிஞர் ஹரி, அருள்தங்கம்,மான்சிங்,சுரேஷ், ராஜாசிங், ஜான்சன், சுப்பையா, மதியழகன், ஏ.பி.என்.குணா, ராஜபாண்டி, நவீன், செட்டியூர் அரிகிருஷ்ணன், சசிகுமார், முத்து, ரிக்கிகணேசன், மாயாண்டி, செந்தூர்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் தங்களது இல்லங்களில் திமுகவின் இருவண்ண கொடிகளை ஏற்றிடும் வகையில், அவர்களுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் 75 நபர்களுக்கு திமுக கொடிகளை வழங்கினார். முடிவில் குறும்பலாப்பேரி டால்டன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.