போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு முடிவு! அந்தமான் நிகோபரின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது தளத்தில், “நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவு. போர்ட் பிளேயரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என்று மாற்ற முடிவு செய்துள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.