பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 100 கோடி சமூக வலைத்தள பாலோவர்ஸ்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். யூடியூபில் 5 கோடி பேரும் , இன்ஸ்ட்டாவில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் UR Cristiano என்ற பேரில் தொடங்கிய யூடியூப் சேனலில் 24 மணி நேரத்தில் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.