கட்சி நிர்வாகிகள் இல்லங்களில் திமுக கொடி பறக்கட்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

- Advertisement -

0

அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கருணாநிதி கட்டி காத்த திமுக கழகம் தமிழகத்தில் 75 ஆண்டுகளாக மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறது.தற்போது திமுகவின் பவள விழா வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளின் இல்லத்திலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு அயராது உழைத்த திமுகவின் மூத்த முன்னோடிகளின் கரங்களினால் கொடியினை ஏற்ற வைக்க வேண்டும். வீதிகள் தோறும் இரு வண்ணக்கொடி பறந்திட வேண்டும். மேலும் கழக கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பவள விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும். எனவே திமுகவினரின் இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் திமுக கொடியினை ஏற்ற வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.