தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு, பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் டில்லி பாபு மரகத நாணயம், ராட்சதன்,பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்பொழுது மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில் டில்லி பாபு உடல் நலக்குறைவால் நேற்று இரவு 12.30 மணியளவில் காலமானார். இவரின் திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவிற்கு இயக்குனர்கள்,நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.