திருச்சி மாநகரத்தில் (09.04.2024) இன்று நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
மேலும் விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.