சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு எண் 191 சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு முதல்வர் பொ ஜெயா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், அலகு எண் 191 முனைவர்.ரா.வீரபத்திரன் வரவேற்றார். தொழிலதிபர் ஆறுமுகசாமி குத்துவிளக்கேற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறைத்தலைவர் மோகனக்கண்ணன் சிறப்புரையாற்றினார். இயற்பியல் துறைத்தலைவர் ராபின்சன் ஜேபஸ் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் சுந்தர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.முன்னாள் மாணவி பத்மப்பிரியா கலந்து கொண்டார்.
முனைவர் பட்டப்படிப்பு முடித்த கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர். கீர்த்தனாதேவி மற்றும் முனைவர்.பொன்மணி மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் கார்த்திகா பாப்பா , அருட்செல்வி அலுவலக பணியாளர் சுரேஷ் ஆகியோர் கௌரவப்படுத்தப்பட்டனர்.ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி, வணிகவியல் துறைத்தலைவர் (ப.நி), சிசுபாலன் மாணவி நாகலெட்சுமிக்கு தையல்மெஷின் வழங்கினார்கௌரவ விரிவுரையாளர், கார்த்திகா தொகுத்து வழங்கினார். வேதியியல் துறை தலைவர் ராஜாசிங் நன்றி கூறினார்.