மிக நெருக்கத்தில் சென்ற ரெயில்:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதலமைச்சர்!

- Advertisement -

0

அமராவதி, ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ள பாதிப்புகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகளிலும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் இரு மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளது.  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்தநிலையில்,விஜயவாடா அருகே கிராமம் ஒன்றில், ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ள சேதத்தை பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது, அந்த வழித்தடத்தில் எக்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக கடந்து சென்றது.முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கத்தில்  ரெயில் சென்றதால், பாதுகாப்புப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதில் அவர் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.