திருச்சி உறையூர், மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் குடிநீர் மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.பின்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வே.சரவணன்,23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.