இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்ததை ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பாஜக உறுப்பினர் ஆகியுள்ளார். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக உறுப்பினர் சந்தா புதுப்பிக்கப்பட்ட நிலையில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.