தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசுக் கலை கல்லூரியில் ஆசிரியர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்து மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் கண்டனத்தைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்ட வருடங்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளான யூஜிசி உத்தரவின்படி எம்பில்., பிஎச்டி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டியும்,பணி மேம்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டியும், அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கும் 65 வயதாக ஓய்வு வயதாக அமுல்படுத்த வேண்டியும், புத்தாக்க புத்தொளிக்கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.