திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் நர்சரி பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தின விழா , உலக பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிகள் பாரம்பரிய உணவான திணை, கம்பு, கேழ்வரகு ,மற்றும் கருப்பு கௌரி அரிசி தினையினால் செய்யப்பட்டது.அனைத்து விதமான பலகாரங்கள் மற்றும் உருண்டைகள் மாணவ மாணவிகள் பெற்றோர் தயாரித்து அதை அந்தப் பள்ளியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் பங்கு கொண்ட அனைவரும் பாரம்பரிய உணவான அனைத்து வகைகளையும் சுவைத்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்த உணவு திருவிழாவில் குழந்தைகளுக்கும், பெற்றோர்கள் தயாரித்து வந்த உணவுகளை சுவைத்துவிட்டு அருமையாக இருக்கிறது. இனிமேல் எங்களுக்கு இந்த உணவுகளை வீட்டில் தயாரித்து கொடுங்கள் என்றும், பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் இனிமேல் எங்களுக்கு பிஸ்கட், சாக்லேட்களை எங்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து விட வேண்டாம் என்றும், மேலும் எங்களுக்கு இந்த உணவை எங்கள் பெற்றோர்கள் தயாரித்து கொடுக்க வேண்டும் என சொல்லி அனைத்து உணவுகளையும் சுவைத்து மகிழ்ந்தனர். மேலும் இந்த உணவு திருவிழாவில் திருவெறும்பூர் சுற்றியுள்ள அனைத்து பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.மேலும் வந்துள்ள அனைத்து பெற்றோர்களும் எங்களது குழந்தைகளுக்கு இனிமேல் பாரம்பரிய உணவை மட்டுமே எங்களது குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அனுப்பவும் என்று மகிழ்ச்சியாக கூறினர்