வ.உ.சியின் 153 வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை…!
சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடிநீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு, திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் வி. ஜெ. செந்தில் பிள்ளை,பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு,மேயர் அன்பழகன், தமிழ்நாடு வெள்ளாளர் சங்க தலைவர் ஹரிஹருண் பிள்ளை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுசெயலாளர் வக்கீல் சரவணன்,கவுன்சிலர் ஜெரால்டு மற்றும் மாவட்ட,மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .