திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாநகர செயலாளரும்,மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், ந.செந்தில், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட – மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .