திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்: மாநகர கமிஷனர் அறிவிப்பு!

- Advertisement -

0

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருகிற 17 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் விண்ணப்ப மனு ரூ 2/- க்கான நீதிமன்ற ஸ்டாம்புடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம், விண்ணப்பதாரின் பாஸ்போர்ட் போட்டோ -2, இரண்டு வழிகளில் இருக்க கூடிய பட்டாசு கடையின் வரை படம், வரைப்படத்தின் கடையுடைய முழு முகவரி குறிப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பதரரின் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடம், வாடகை கட்டிடமாக இருப்பின் அல்லது காலியிடமாக இருந்தால் 2024-25 ம் ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு வரை அதாவது இந்த மாதம் 30 ம் தேதி வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, உரிமையாளரின் 3 மற்றும் உரிமையாளர் உடன் வாடகை ஒப்பந்த பத்திரம், தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கான உரிய வணிக உரிமம் பெற திருச்சி மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய அசல் ரசீது, உரிமக் கட்டணம் ரூபாய் 500 ஆன்லைன் செலுத்தி யதற்கான அசல் ரசீது, மாநகராட்சி- பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருப்பின் துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களுடன் 4 நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.குறித்த காலக் கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன் அறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.