வ.உ.சி யின் 153 வது ஜெயந்தி விழா:தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் மாநில தலைவர் செந்தில் பிள்ளை அழைப்பு!

- Advertisement -

0

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது ஜெயந்தி விழா நாளை(05.09.2024) இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.வ உ சி யின் 153 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வ. உ. சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

- Advertisement -

அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா நாளை(05.09.2024) தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவரும் டாக்டர் வி. ஜெ. செந்தில் பிள்ளை தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. விழாவிற்கு முன்னதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகில் உள்ள தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நீதிமன்றம் எதிரில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.விழாவில் மாநில பொது செயலாளர் கோவி. சுவாமிநாதன் பிள்ளை, மாநில பொருளாளர் ந. மாணிக்கம் பிள்ளை, அவை தலைவர் மயில் வாகனம் பிள்ளை, துணை செயலாளர் மாணிக்கம் பிள்ளை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள்,அனைத்து மாவட்ட நிர்வாகிகள், திருச்சி மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில தலைவர் செந்தில் பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.