தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 51-ஆவது மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.இறுதி ஆட்டத்தில்காயல்பட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப், யுனைடெட் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில் காயல்பட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை, ரூ.12 ஆயிரம் ரொக்கப்பரிசு, 2-ஆம் இடம் பெற்ற யுனைடெட் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசுக் கோப்பை, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விழாவில் மரைன் இன்சூரன்ஸ் சர்வேயர் அமல்ராஜ், பங்குதந்தை சகாய அந்தோணி டைட்டிஸ், ஊர் தலைவர் குழந்தை, துறைமுக கமிட்டி தலைவர் ஜோசப், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் லூர்து, செயற்குழு உறுப்பினர் வால்டர், துணை செயலாளர் நிக்கோலஸ், உடற்கல்வி ஆசிரியர் சகாயராஜ், சந்திரபோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.