புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிப்பு குறித்து பேசிய புரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி, “பிகேஎல் சீசன் 11க்கான தொடக்க தேதி மற்றும் இடங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 10 சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிறகு, பிகேஎல் சீசன் 11 லீக்கின் தொடர்ச்சியான எழுச்சியில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கவும். இது இந்தியாவிலும் உலகெங்கிலும் கபடியின் வளர்ச்சியை வலுப்படுத்தும்.பிகேஎல் சீசன் 11 ஏலம் மும்பையில் ஆகஸ்ட் 15-16 வரை நடைபெற்றது, இதில் எட்டு வீரர்கள் ரூ.1 கோடிக்கு மேல் சென்று லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
பிகேஎல் சீசன் 11 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும். நடப்பு சாம்பியன் புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் தமிழக வீரர் அஜித் குமார், அபினேஷ் நடராஜன் ஆகியோர் புனேரி பல்டனுக்காவும், அபிஷேக் தமிழ் தலைவாஸ்அணிக்கும் , பாபு பாட்னா பைரேட்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளனர்.