ஜமால் முகம்மது கல்லூரியில் சமூகத்தின் வளர்ச்சி பாதையில் மாணவர் பங்கு பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி!
ஜமால் முகம்மது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தில் சமூகத்தின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு என். எம். காஜாமியான் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளரும், செயலாளருமான ஏ. கே. நஜுமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகம்மது, உதவி செயலாளர் கே. அப்துஸ் சமத், உறுப்பினர் மற்றும் கெளரவ இயக்குனர் கே.என்.அப்துல் காதர் நிஹால் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை உரையில் கல்லூரி முதல்வர் டி. ஐ.ஜார்ஜ் அமலரெத்தினம் சமூக வளர்ச்சியில் மாணவர்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விரிவான பார்வையை பற்றி பேசினார். மாணவர்களின் ஈடுபாடு மற்றும் முன்முயற்சிகள் மூலம் சமூக முன்னேறத்தில் எவ்வாறு செய்லூக்கமாக பங்காளிக்க முடியும் மற்றும் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை டாக்டர் செல்வராஜு விரிவாக விளக்கினார்.