மதுரையை சேர்ந்த சம்யுக்தா உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சி யாளர் போட்டியில் கலந்து கொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாக செய்து காட்ட வேண்டும் மற்றும் பிற மாணவர்களுக்கு குறைந்தது 50 மணி நேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும். இதை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
இந்த பதிவு கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும். அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகக் குறைந்த வயதில் கச்சிதமாக செய்து காட்டிய மாணவர் இந்த கின்னஸ் உலக சாதனைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். சம்யுக்தா 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் செய்து காட்டி இந்த சாதனைக்கு தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றார்.