திருச்சி காஜா நகரில்உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் 60 வது விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் சாஹிப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பள்ளி தலைவர் ஏ. கே. காஜா நஜுமுதீன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல், பள்ளி பொருளாளர் ஏ. எஸ். காஜாமியான் அக்தர், பள்ளி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் மும்தாஜ் பேகம், உடற்கல்வி இயக்குனர் உமாமகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.