வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான PM internship திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான தேதியை மத்திய அரசு நீடித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வருகிற 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதி உள்ள பட்டதாரிகளுக்கு ஒருமுறை 6000 ரூபாயும், மாதந்தோறும் 5000 ரூபாயும் வழங்கப்படும். மேலும் இந்த தொகையை பெறுவதற்கு pminternship.mca.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.