5 உலக சாதனை படைத்து நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை: தென்காசி எஸ்.பி. பாராட்டு…!!!

- Advertisement -

0

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து அதில் உள்ள பெயர்களை சரியாக அடையாளப்படுத்தியும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங் களை சரியாக இடம் கண்டு எடுத்தும் சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்காக அமெரிக்க புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட், வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்டில் 2 விருதுகள், இன்டர்நேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் விருதுகள் என 5 உலக சாதனை விருதுகள் குழந்தை லயாவிற்கு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்அந்த குழந்தையை நேரில் வர வைத்து பாராட்டியுள்ளார். அப்போது குழந்தையின் நுண்ணறிவு திறனை மென்மேலும் வளர்க்கும் வகையில் உறுதுணையாக இருக்கும்படி அவரது பெற்றோருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.