ராமநாதபுரத்தில் இருந்து தங்கச்சிமடம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது திடீரென மோதியது.இந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த காரில் மொத்தம் 7 பேர் பயணித்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுனரும், பெண்ணும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பச்சிளம் குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் இப்படியொரு சோகம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.