ஒரே பள்ளியை சார்ந்த 4ஆசிரியர்கள் சஸ்பெண்ட் – CEO உத்தரவு!

- Advertisement -

0

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.பள்ளி மாணவர்கள் சிலரை இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது  இரண்டு சக்கர வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.

- Advertisement -

இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர்.இது குறித்து  கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி,டூவீலரை கழுவ விட்ட 4 ஆசிரியர்களை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் டூவீலரை கழுவ விட்ட 4 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.