திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள ஆடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.விழாவில் பள்ளியின் தாளாளர் அப்துல்லா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆரிஃபா அப்துல்லா முன்னிலை வகித்தார்.மேலும் விழாவில் சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் ,தேசிய பயிற்சியாளருமான நல்லுசாமி அண்ணாவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.மேலும் இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.