நம் நாட்டின் பல்வேறு நகரங்களில், தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் இந்த நாய்கள் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, எதிரில் தென்படுபவர்களை கடித்து குதறுகின்றன.உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘உலகம் முழுதும் ஆண்டுக்கு, 59,000 பேர் நாய் கடியால் இறக்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 20,000 பேர் இறக்கின்றனர்’ என, தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் (59,000) 35% ஆகும். 2021ல் இருந்து நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளது.