கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.மேலும் அண்மையில் இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது.வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் இன்று காலமானார்.கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்தபோது பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சர்வதேச சிறுதானிய மாநாட்டில் பாப்பம்மாள் பாட்டி கலந்துக்கொண்டார். அப்போது பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.